நம்ப ஆடுகளுக்கு வெய்ய காலத்தில் சளி பிடித்திருக்கிறது அதற்கான மருந்து நம் வீட்டிலேயே செய்யலாம்?
குறிப்பு : எத்தனை ஆடு இருக்குதோ அதுக்கு இருக்கின்றதோ அதற்க்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.
இதுக்கு தேவையான பொருட்கள்
கோடான்டி தைலம் .
➡️மஞ்சத்தூள் ( சமையலுக்கு பயன்படும் மஞ்சள் தூள் )
செய்முறை:
➡️ஒரு பாத்திரத்தில் 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் . நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை அந்த பாத்திரத்தில் சேர்க்கவும்➡️பின் , பாத்திரத்தில் கலந்திருக்கும் தேங்காய் எண்ணெய் மற்றும் பூண்டை இடிதலில் இடிக்கவும் .
➡️சிறிதளவு மஞ்சள் தூளை அதிலில் சேர்க்கவும் , தூள் சேர்த்து உடன் ( தேங்காய் எண்ணெய் , பூண்டு மற்றும் மஞ்சள் தூள் நன்றாக கலந்து விடவும் ). இந்த பாத்திரத்தை அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும், கொஞ்சம் வெதுவெதுப்பான உடன் அடுப்பு நிறுத்தி விட வேண்டும்,சிறிது நேரம் ஆர வேண்டும் . நன்றாக ஆரிய பின் தைலம் சேர்த்து கொள்ளவும் (நான்கு அல்லது ஐந்து சொட்டுகள்).
ஆடுகளுக்கு தயாரித்த மருந்தை எப்படி தருவது ?
கலந்திருக்கும் மருந்தை ஒரு பஞ்சில், ஆடுகளுக்கு தலையை தூக்கி மூக்கில் கலந்திருக்கும் அந்தப் பஞ்சை சொட்டு சொட்டாக மூக்கில் விட வேண்டும் ( இரண்டு அல்லது மூன்று சொட்டு ). மூக்கு வழியில் நன்றாக மூச்சு இழுத்து விடும் அதற்காகத்தான் மூக்கில் அந்த மருந்தை விடுகிறோம். இதில் ஆடுகளுக்கு நோய் குணமாகவில்லை என்றால் சாம்பிராண்டி போட்டால் குணமாகலாம். காலை அல்லது மாலை வேளையில் இதை பயன்படுத்தலாம் இந்த மருந்தை.
இப்படி செய்தால் வெயில் காலத்தில் ஆடுகளுக்கு நோய் வராமல் தடுக்கும்.