உள்ளங்கையை தண்ணீரில் நனைத்து பின் நாற்றாங்காலில் 12 இடங்களில் பயிர்களின் மேல் கையைக் கொண்டு செல்ல வேண்டும். 12 முறைகளில் இலை பேனின் எண்ணிக்கை 60-ஐ கடந்து விட்டால் தயாமீத்தாக்ஸம் 25 சதவிகிதம் நனையும் குருணை 100 கிராம் /எக்டர் தெளிக்க வேண்டும்.
தெருவிளக்கிற்கு அருகில் நாற்றாங்கால் அமைக்கக்கூடாது.
நாற்றுக்களைப் பரிந்துரைக்கப்பட்ட இடை வெளியில் நடவு செய்ய வேண்டும்.
தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களைப் பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.
தேவைக்கு அதிகமாகத் தண்ணீர்ப் பாய்ச்சுவதைத் தவிர்க்கவும்.
ஓர் ஏக்கருக்கு 6 லிட்டர் என்ற அளவில் மண்ணெண்ணெய் பயன்படுத்திக் கூண்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். தூர்களிலிருக்கும் புழுக்களைக் கீழே விழச் செய்ய இளம்பயிர்களின் குறுக்கே கயிறைப்போட்டு இழுத்தால் கூண்டுகள் நீரில் விழுந்து விடும்.
இலை மடக்குப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிரெம்மா கிலொனிஸ் முட்டை ஒட்டுண்ணிகளை பயிர் நடவு செய்து 37,44 மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை 5 சிசி (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள் எக்டர்/முறை) என்ற அளவில் விட வேண்டும்.
நடுவதற்கு முன் நாற்றுக்களின் நுனியைக் கிள்ளி குருத்துப்பூச்சி முட்டைக் குவியல் களை அழிக்கவேண்டும்.
விளக்கு பொறி அமைத்துப் புகையானை கவர்ந்து அழிக்கலாம். அதிகாலை நேரத்தில் விளக்குப் பொறியைச் சுற்றிப் பூச்சிக்கொல்லி தெளித்தோ அல்லது தூவியோ கவரப்பட்ட புகையான் அல்லது பச்சைத் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் @ 15 லிட்டர் /எக்டர் அல்லது இலுப்பை எண்ணெய் 6 சதவிகிதம் @ 30லிட்டர் /எக்டர் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர் தெளித்துக்கட்டுப்படுத்தலாம்.
அறுவடை செய்த பின் தாள்களை மடக்கி உழுதல் மூலம் புழுக்களையும், கூட்டுப்புழுக்களையும் அழிக்கலாம்.
பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளித்துப் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
- கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 சதவிகிதம் 18.75-25.0கிலோ/எக்டர்
- பைப்ரினில் 5 சதவிகிதம் SC 1000-1500மிலி/எக்டர்
- தையமித்தாக்சம் 25 சதவிகிதம் WG 100கிராம்/எக்டர்