பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடும் நிவர்த்தியும்

 பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு ஏன் தோன்றுகிறது... 

1. மண்ணில் போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கலாம்.

2. மண்ணில் ஊட்டச்சத்து இருந்து மண்ணின் கார அமில தன்மையால் அந்த சத்து செடிகளுக்கு கிடைக்கப் பெறாமல் இருக்கலாம்.

3. மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால் வேர்கள் குறிப்பிட்ட ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள முடியாமல் இருக்கலாம்.

4. மண்ணில் ஊட்டச்சத்து இருந்து செடியின் குறிப்பிட்ட பாகங்களுக்கு சென்றடையாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற பயிர்களில் அடி அழுகல் அறிகுறி மண்ணில் போதுமான அளவு கால்சியம் ஊட்டச்சத்தை இருக்கும் போதும் ஏற்படுகிறது.

5. ஏதேனும் ஒரு ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் போது அது ஒரு சில ஊட்டச்சத்துக்களை செடிகளுக்கு கிடைக்க பெறா வண்ணம் தடையை ஏற்படுத்தும். இது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது. பயிர்களுக்கு ஒவ்வொரு ஊட்டச்சத்தும் கிடைப்பதில் ஏற்படும் சவால்களை பற்றி விரிவாக பார்ப்போம். 

தழைச்சத்து:- 

✅தொடர்ச்சியாக மண்ணில் அதிக ஈரப்பதம் இருத்தல் அல்லது வயலில் நீர் தேங்கி இருப்பதால் தழைச்சத்து செடிகளுக்கு கிடைக்காது.

மணிச்சத்து :- 

✅மிகவும் குறைந்த அல்லது அதிகப்படியான மண்ணின் கார் அமிலத்தன்மை மணிச்சத்தை பயிர்களுக்கு கிடைக்கச் வண்ணம் மாற்றுகிறது.

சாம்பல் சத்து :- 

✅தொடர்ச்சியாக அதிக மண் ஈரப்பதம் மற்றும் அதிக கார அமில தன்மை இருப்பதால் சாம்பல் சத்து குறைபாடு பயிர்களில் காணப்படும்.

கால்சியம் :- 

✅வறட்சி அல்லது மிகப்படியான நீர் விடுதல் முதலியவை கால்சியம் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாகும்.

மெக்னீசியம் :- 

✅மண்ணின் மிகவும் குறைந்த கார அமில தன்மையினால் மெக்னீசியம் குறைபாடு பயிர்களில் காணப்படும் .

போரான் :- 

✅மணல் பாங்கான மண் வகை, தழைச்சத்து கிடைக்காமல் இருத்தல், மிகவும் குறைந்த அல்லது அதிகப்படியான கார அமிலத்தன்மை(pH).

காப்பர் சத்து :- 

✅மிகவும் இறுக்கமான மண், அதிக நீர் விடுதல், போதுமான அளவு தழைச்சத்து கிடைக்காமல் இருத்தல் போன்றவை காப்பர் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாகும்.

Previous Post Next Post

نموذج الاتصال