மாவுப் பூச்சிகளின் மேலாண்மை


 ⚠️ மாவுப்பூச்சிகள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் 3-5 மி.மீ. அளவில் காணப்படுகின்றன

. ⚠️ மாவுப்பூச்சிகள் திசுக்களை உண்டு உமிழ்நீரை செடியினுள் செலுத்துவதால் இலைகள் சுருங்கி முரணையாகின்றன. இதனால் இளஞ்செடிகள் வாடி காய்ந்து மடிந்து விடும். 

✅எறும்பு புற்றுக்களை அழிக்க வேண்டும். இவற்றை அழிக்க குளோரிபைரிபாஸ் 20 இ.சி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மிலி கலந்து தெளிக்க வேண்டும்.மாவுப்பூச்சிகளின்  மீது சோப்பு கரைசல் தண்ணீரைப் பீச்சி அடிக்க வேண்டும்.

 ✅ வேப்பங்கொட்டை சாறு 5 %  அல்லது வேப்ப எண்ணெய் 3 % தெளிக்க வேண்டும்.மீன் எண்ணெய் சோப்பு 2.5% என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 

✅ உயிரியல் கட்டுபாடாக ஆஸ்திரேலிய பொறி வண்டு - கிரிப்டோலிம்ஸ் மாண்ட்ரோசோரி வண்டுகளை  300/ ஹெக்டேர் என்ற எண்ணிக்கையில்  வெளியிடலாம்.

Previous Post Next Post

نموذج الاتصال