இந்நோய் பயிரின் எல்லாப் பருவங்களிலும் காணப்படும். இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டால் விதையிலைகள் மஞ்சளாகவும் பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக் காம்புகளின் மீது பழுப்புநிறவளையம் காணப்படும்.
தாக்கப்பட்ட இளஞ்செடிகள் நாளடைவில் காய்ந்து விடுகின்றன.செடிக்கு எடுத்துச் செல்லப்படும் சத்துக்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை வேர்ப் பாகத்திலிருந்து மேல்நோக்கி எடுத்துச் செல்வது தடைப்படுகிறது. இதனால் வாடல் ஏற்படுவதற்கு சாதகமாகிறது.
மேலாண்மை :
➡️ஒரு கிலோ சணப்பு விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் (அ) சூடோமோனாஸ்
➡️ப்ளோரசன்ஸ் 10 கிராம் (அ) கார்பன்டாசிம் 2 கிராம் (அ) திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வெண்டும்.
➡️எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (அ) டிரைக்கொடெர்மா விரிடியை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் (அ) மணலில் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து இடவேண்டும்.
➡️பாதிக்கப்பட்ட இடத்தில் கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்."