✅ உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வாய்புண் குணமாக ஊசிப்பாலை இலைகளை வாயில் போட்டு நன்றாக மென்று தின்று வரலாம்.
✅ சிறிதளவு ஊசி பாலை இலைகளை 200 மில்லி தண்ணீரில் போட்டு அது 100மில்லியாக சுண்டும் அளவிற்கு கஷாயமாக்கி பருகிவர வாய்ப்புண், உதடு வெடிப்பு மற்றும் நாசி துவாரங்களில் ஏற்படும் வறட்சி குணமாகும்.
✅ பாசிப்பருப்பை வேகவைத்து அதனுடன் ஊசி பாலை இலையை வதக்கி சேர்த்து உடன் மிளகு, சீரகம் ,வர மிளகாய் ,உப்பு போன்றவற்றை கூட்டாக சேர்த்து வாரத்தில் இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர கண்கள் குளிர்ச்சியாகும்.தேகம் பூரிப்பாகும்.