✅பயறுவகைப் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2% டி.ஏ.பி கரைசல் தயாரிக்க 4 கிலோ தேவைப்படுகிறது.
✅4 கிலோ டி.ஏ.பி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும். இரவு நேரத்தில் 4 முறை இந்த கரைசலை நன்றாக கலக்க வேண்டும்.மறுநாள் காலையில் தெளிந்த நீரை வெள்ளைத் துணியால் வடிகட்டி அந்த நீருடன் 190 லிட்டர் தண்ணீர் கலந்து காலை/ மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
✅பயறுவகைப் பயிர்களில் விதைத்த 30வது நாள் ஒரு முறையும் 45வது நாள் ஒரு முறையும் தெளிக்கலாம். (அல்லது) பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் 15வது நாள் கழித்தும் தெளிக்கலாம். பூக்கள் கொட்டாது.
✅காய்களில் மணி (பருப்பு) திரட்சியாக இருக்கும்.காய்களின் எண்ணிக்கை கூடும்.