✅மண்ணின் கரிமச்சத்தையும் அதிகரிக்கும் ஒரு முக்கியப் பொருளாக பயன்படுகிறது. மக்கிய உரத்தை செயற்கை உரத்திற்கு ஈடாக ஒப்பிட முடியாது. ஆனால் மக்கிய உரமானது மண்ணிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் குறைந்த அளவு கொடுக்கிறது.
✅ஒரு ஏக்கருக்கு 2 டன் செறிவூட்டப்பட்ட மட்கு உரம் தேவைப்படுகிறது. இதையும் பயிரிடப்படுவதற்கு முன்பு நிலத்தில் அடியுரமாக இட வேண்டும்.
✅கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஏக்கருக்கு 4 லிருந்து 5 டன் வரை உலர்ந்த இலைகள் உற்பத்தியாகிறது. உலர்ந்த கரும்பு தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மை மேம்படுகிறது. இதனால் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்து, நீரைத் தக்கவைக்கும் திறன் அதிகரிக்கிறது.