✅இரண்டாவது அடுக்கில் சேகரித்த தேநீர்க் காகிதக் கோப்பைகளை நீரில் கொதிக்க வைத்து, அதன் மெழுகுத் தன்மையை நீக்கி பிறகு தொட்டியில் நிரப்ப வேண்டும். அதன் பிறகு சிறிதளவு நீர் மேலோட்டமாக தெளிக்க வேண்டும்.
✅மூன்றாவது அடுக்கில் மண் கலவையைச் சேற்றுப் பதத்தில் கரைத்துத் தெளிக்க வேண்டும். ஏனென்றால், மண் கலவை நுண்ணுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும்.
✅நான்காவது அடுக்கில் தொழு உரம் 5 கிலோ வரை நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும். தொழு உரத்தில் தழைச்சத்து மிகுதியாக இருக்கிறது.
✅இறுதியாகச் சாணக் கரைசலைத் தெளித்துக், காய்ந்த இலைகளை மேலே நிரப்ப வேண்டும். இதற்கு மேல் PUSA நுண்ணுயிரிப் பெருக்கி ஒரு மாத்திரையை 5 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்கவும். இறுதியாகச் சணல் பையைக் கொண்டு மூட வேண்டும்.
✅பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உரப்படுக்கையைத் திருப்புதல் மக்குதலை எளிமையாக்கும். அறுபது நாளில் இருந்து எழுபது நாட்களுக்குள் அனைத்துப் பொருட்களும் நன்கு மக்கி, நல்ல உரமாக மாறிவிடும். பின்னர் அதனை மொத்தமாக மூட்டையில் நிரப்பி வயலுக்கு இடலாம் அல்லது வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்திற்கு உரமாகப் பயன்படுத்தலாம்.