✅வேப்பம் புண்ணாக்கைச் சாக்கில் வைத்துக் கட்டி பாசன வாய்க்காலில் வைப்பதால் கரையான் தொந்தரவுக் குறைகிறது.
✅மானாவாரி நாற்றங்காலில் கரையான்களின் தொந்தரவு அதிக அளவில் உள்ளது. இதற்குவேப்ப இலைகளைப் பரப்புவதுடன். செம்மறி ஆட்டு முடி மற்றும் மனித முடியையும் சேர்த்து வைத்தால் இதை உண்ணும் கரையான்கள் இறந்து விடும்.
✅மரக்கன்றுகள் நடும் முன்னர் நடும் குழியில் உலர்ந்த இலைகள் மற்றும் குப்பைகளைபோட்டு எரித்த பின்னர் நடுவதால் கரையான்கள் வராது. அதே போல சாம்பலைத் தூவி விட்டுப் பின்னர் நட்டாலும் கரையான் தாக்குதல் இருக்காது. ஐந்து சதவிகிதம் சாதாரண உப்புக் கரைசலை மர தண்டுப் பகுதியில் தெளிப்பதால் கரையான்கள் வராது