தாவரங்களுக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து , சாம்பல் சத்து போன்ற ஊட்டச்சத்துக்களை மண்ணில் இருந்து மற்றும் வளிமண்டலத்திலிருந்து கிரகித்து தாவரங்களுக்கு வளர்ச்சிக்கு உகந்த வடிவில் தர நுண்ணுயிர்கள் மிக தேவை.
எல்லா தாவரங்களும் தனக்கு தேவையான சத்துக்களை நுண்ணுயிர்கள் மூலம் அதன் வேர் மூலம் மண்ணில் இருந்தும், சுற்றியுள்ள சூழலிருந்தும் எடுத்துக்கொள்ளும்சில முக்கிய உயிர் உரங்களைப் பற்றி விரிவாக காண்போம்.
1. அசோஸ்பைரில்லம்:
உயிர் உரங்களில் அதிக அளவு ஆராய்ச்சி மேற்கொள்ள பட்ட பாக்ட்டீரியா வகையைச் சார்ந்த நுண்னுயிரி அசோஸ்பைரில்லம் ஆகும்.
வாயு மண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் என்னும் வாயுவை ஈர்த்து பயிர்களுக்கு கொடுக்கிறது. இதனால் பயிர்களுக்கு சிபாரிசு செய்யப்படும் தழைச்சத்து அளவில் 20% முதல் 40% சதவீதம் வரை குறைத்துக்கொள்ள முடியும்.
இந்த வகை நுண்ணுயிரானது பயிர் வளர்ச்சிக்கு தேவையான சில வளர்ச்சி ஊக்கியையும் உற்பத்தி செய்கிறது. மகசூலை அதிகரிப்பதுடன், வறட்சியைத் தாங்கும் திறனையும் சில பயிர்களுக்கு கொடுக்கிறது. மேலும் இவைகள் அழிந்தவுடன் மண்ணில் மக்கி, பயிர்களுக்கு உரமாகவும், மண்ணின் வளத்தைக் காக்கவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை :
கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் பவுடருடன், தேவையான அளவு ஆறிய அரிசிக் கஞ்சியுடன், பவுடராக இருந்தால் இரண்டு பாக்கெட்(1 பாக்கெட் -200கிராம்) அல்லது 100 மில்லி திரவ அசோஸ்பைரில்லத்தை கலந்து கலவை தயார் செய்ய வேண்டும்.
இந்த கலவையில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை இட்டு, விதைகளின் மேல் முழுதாக படும்படி கலக்கிவிட்டு, 30 நிமிடம் நிழலில் உலற வைத்துப் பின் விதைக்கலாம்.
நேரடியாக விதைக்கும் பயிர்களுக்கு முளைப்புத் திறனை அதிகரிக்க அசோஸ்பைரில்லம் பவுடராக நனைத்து அவசியம் விதை நேர்த்தி செய்யலாம்.
நாற்றுவிட்டு நடும் பயிர்களுக்கு நாற்றுக்களின் வேர்களை நனைத்து நடலாம். இதனால் ஆரம்பகால வளர்ச்சி உறுதி செய்யப்படும்."