புங்கம் பிண்ணாக்கிலுள்ள உரச்சத்துக்களாவன:
➡️ நைட்ரஜன் -5.1
➡️ பாஸ்பரஸ் - 1.1
➡️ பொட்டாஷ்- 1.3
➡️ சோடியம் ஆக்ஸைடு - 0.8
உபயோகிக்கும் முறை :
✅ யூரியா உரத்தை அம்மோனிய உரமாக மாற்றும் யூரியேஸ் என்ற என்ஸைம் பிண்ணாக்கில் உள்ளது. அதிகமாக நீர் வடியும் இடங்களில் பிண்ணாக்குடன் யூரியாவை கலந்து உரமிட்டால், உரச்சத்து வீணாவது குறையும்.
✅ பிண்ணாக்கிலுள்ள புரதப்பகுதியை சோடியம் கார்பனேட் மூலம் தனித்துப் பிரித்து, ஒட்டுப்பசைதயாரிக்கலாம். இப்பசையை பூச்சிக்கொல்லி இரசாயனங்களுடன் கலந்து தெளித்தால்,பூச்சிக்கொல்லி நன்கு செடிகளில் பரவி ஒட்டிக்கொள்ளும் இதனால் பூச்சிக்கொல்லியின் திறனும் அதிகரிக்கிறது.