பனை மரத்தின் நன்மைகள் - Ulaviy News

பனை மரத்தின் நன்மைகள் :-

1. இதன் மட்டை அழகிய ECO ரெஸ்டாரெண்ட் கூரை வேய பயன்படும் ஒரு மரத்தின் மூலம் வருடத்திற்கு 15 மட்டைகள் எடுக்கலாம் .

2. இதன் பூ (பாலை) பதநீர் கிடைக்கும் இது உடம்பிற்கு மிகுந்த ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீட்டுத் தரும்.

3. இதன் காய் நொங்கு இதுவும் மேல் கூறிய குளிச்சி மற்றும் உடம்பிற்கு தேவையான ஆற்றலைத் தரவல்லது.

4. இதன் தண்டு ஒரு உறுதியான தூண் அமைக்கப் பயன்படும்

5. இதன் கனி உண்ணவும் இதன் கனியை நிலத்தில் புதைத்து பனை கிழங்கு தயாரிக்கப் பயன்படும் இந்த கிழங்கை வேக வைத்து உண்டால் உடம்பிற்கு மிகுந்த ஆரோக்கியம் இதில் கிழங்கிற்கே உரிய வாயுத் தொல்லை அற்றது.

6. இந்த மரத்தை நகரத்தில் வளர்க்க ஏதுவானது அதிக அளவு நிழல் தரவில்லை என்றாலும் அதிக அளவு பயனுள்ளது. இதன் வேர் ஆணி வேர் தொகுப்பு எனவே பக்கவாட்டில் வளர்ந்துக் கட்டங்களுக்கு சேதம் விளைவிக்காது இதற்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதிங்கம் உறிஞ்சும் குணம் கிடையாது. பனை மரம் வளர்க்க அதிகமான இடம் பக்கவாட்டு மேல்மட்டம் தேவை இல்லை குறைந்த அளவு இருந்தால் போதும்.

சிந்திப்பீர் 50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனை மரங்கள் அழிப்பு

⚠️ இதற்குக் காரணம் வெள்ளைச் சர்க்கரையை நம்மிடம் கொடுத்து நம்மைச் சர்க்கரை நோயாளிகளாக மாற்றவே இதன் மூலம் மில்லியன்களில் மருத்துவத்தில் பணம் சம்பாதிக்கபடுகின்றது. 

சிறு குறிப்பு :-

வருடத்துக்கு ஒரு பனை மரம் கொடுப்பது

☑️180 லிட்டர் பதநீர்

☑️25 கிலோ கருப்பட்டி

☑️20 கிலோ பனை நார்

☑️10 கிலோ விறகு

☑️6 பாய்...

☑️2 கூடை..?

குறைந்த விலை வைத்தாலும் கூட ஒரு பனைக் கொடுக்கும் வருட வருமானம் ₹17,820 /-

பனைமரம் நமது தேசியமரம் – பனை மரத்தின் நன்மைகள்: -

1. பனைமரம் ஏரிக் குளங்களில் மண்ணரிப்பைத் தடுக்கும் அதன் வேர்கள் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும்.

2. பனை மரம் ‘கா ,ஓலைகள் கூரைகள் கட்டுவதற்க்கும் அதன் மட்டைப் பாதுகாப்பு படல் அமைக்கவும் அதன் நாறு கட்டுவதற்க்கும் அதன் ஓலைகள் கலைப் பொருள் பாய் பெட்டி போன்றவற்றை செய்யப் பயன்படும்.

3. பனை மரம் பதநீர் 100 சதவீத இயற்கைப் பானம் உடல் சூட்டைத் தணிக்கும் அதன் கருப்பட்டி கல்கண்டு ஆகியவை சிறந்த நாட்டு மருத்துவம் கருப்பட்டி சேர்த்த பொழுது எவர்க்கும் சக்கரை வியாதி இல்லை பனங்கல் மிதமான போதைத் தரும் உடலுக்கும் எந்த தீங்கும் இல்லை.

4. பனை மரம் பழம் மிக அதிகமாக வைட்டமின் சி கொண்டது அதன் கொட்டை அதிக புரசத்து நிறைந்த தவம் கொண்டது அதன் கிழங்கு அதிகமான நார்சத்து கொண்டது.

5. பனை மரம் காய்ந்த வேரை புகையிலையாக முன்னோர்கள் புகைத்தனர் காய்ந்த மரத்தை வலை அமைத்து வீடு அகப்பைக் கரண்டி ஜாடிகள் கூசாக்கள் அமைத்தனர்.

இவ்வளவு நன்மைகள் செய்யும் பனை மரம் வியாபார சூத்திரர்களின் சூழ்ச்சியால், மதுபான அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் திட்டமிட்டு 30 கோடி பனை மரங்கள் நம்மைக் கொண்டே அழிக்கப்பட்டது. 

தேசியமரம் பனைமரத்தைப் பாதுகாப்போம்.

நமது பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் பனை மரங்களை நேசிப்போம்...

பனை மரங்களைப் பாதுகாப்போம்...

பனை மரங்களினால் பயன் பெறுவோம்...

வளமுடன் வாழ்வோம் உறவுகளே...

✅ பனை என்பது ஒரு மரம் மட்டும் அல்ல ; தமிழர்களின் சமூகப் பண்பாட்டு வாழ்விலும் வரலாற்றிலும் பொருளியலிலும் இரண்டாயிரம் ஆண்டுக்கட்கும் மேலாகத் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தி வந்தச் சிறப்புக்குரியது.

✅ இதன் உயரத்தைப் போன்றே இதன் வரலாறும் நெடியது. இத்தகைய பாரம்பரியம் மிக்க பனைமரம் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது.

✅ நம் கண்முன்பே இதன் அழிவு நிகழ்கிறது. ஆனால், நம்மில் பலருக்கும் இதன் அழிவுத் தெரியவில்லை.

✅ இதன் அழிவைத் தடுத்து நிறுத்தும் இயக்கங்கள் எவையும் உருவாகாத தமிழ்நாட்டுச் சூழலில் இம்மரம் தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்தி எதிர்காலத் தலைமுறைக்கு வழங்க வேண்டும் என்பதே உழவி™️ நிறுவனத்தின்  நோக்கம். 

இந்த தீர்ப்பை நான் முழு மனதுடன் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்...

ஏண்டா மரம் மாதிரி நிற்கிற என்று யாரும் யாரையும் திட்டி விட வேண்டாம் . மரங்கள் தான் நம்மைக் காக்கும் சாமி.  🌴மரம் வளர்ப்போம்...

பனை மரம் பயன் தரும் சதவீதம் தலைமுறைகளையும் தாண்டி  அதிகளவு இருப்பதால் பனைமரம் சொன்னதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Previous Post Next Post

نموذج الاتصال